பிளாட் நம்பர் 5, ஏகாம்பரர் நாயக்கர் தொழில்பேட்டை ஆலப்பாக்கம் சென்னை - 166

 சுயவரம

வணிகம

செய்திகள

கல்வி

கோவில்கள்

சினிமா

அனைத்தும்

சுயமவரம

சினிமா

சின்னம்மா சசிகலாவுக்காக அதிமுக விதிகள் தளர்த்தப்படும்: பொன்னையன் தடாலடி!

1982-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து வருகிறார் சசிகலா. அதிமுகவில் 30 லட்சம் தொண்டர்கள் என்ற நிலையை 1.5 கோடியாக உயர்த்த ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. அவர் அதிமுகவின் பொதுச்செயலராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அவருக்காகவே கட்சியின் விதிகளை தளர்த்துவோம். சின்னம்மா சசிகலா மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை. பொய்யானவை. இவ்வாறு பொன்னையன் கூறினார்.
 

 

Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam

 மகளிர் பக்கம்

நாணய பக்கம்

சிறுவர் பக்கம்

ஆன்மீக பக்கம்

அரசியல் பக்கம்

மருத்துவ பக்கம்

 

பசுமைபக்கம்

வாகனபக்கம்

கட்டுமானம்

l

போயஸுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கொடுத்த வாக்கு மூலம்- சேலம் கூட்டுறவு வங்கியில் ஐடி ரெய்டு

சேலம்: போயஸ்கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. 131 கோடி ரூபாய் பணத்தில் 92 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும். இதனையடுத்து சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சேகர் ரெட்டியும் சீனி வாசலு ரெட்டியும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றது. ஊடகங்களின் கவனம் முழுக்க சென்னை தலைமைச் செயலாளர் வீட்டின் மீது இருக்க, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். விடிய, விடிய நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் 10 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். அதே போன்று சேலம் புறநகர் ஜெ. பேரவை செயலாளரும், கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. சேலம், திருச்சி, சென்னையை சேர்ந்த 20 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த வங்கியின் 64 கிளை மேலாளர்களை அழைத்து வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களை பெற்று விடிய விடிய விசாரணையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வங்கி கணக்கு, வரவு செலவு, தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கியில் பரிவர்த்தனை செய்தது தொடர்பான ஆவணங்கள் உட்பட ரசீதுகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கி தலைவர் இளங்கோவன் அமைச்சர் ஒருவர் நெருக்கமானவர் என்பதால் சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தை வைத்து இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராம மோகன் ராவ் வீட்டில் 25 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை- விடிய விடிய விசாரணை

சென்னை: தமிழக தலைமைச்செயலர் ராம மோகன் ராவ், வீட்டில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதோடு, ராமமோகன் ராவிடமும், அவரது மகனிடம் விசாரணை நடத்தினர். இருவரும் இன்று கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: போயஸ்கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. 131 கோடி ரூபாய் பணத்தில் 92 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும். ரூபாய் நோட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் 92 கோடி ரூபாய் புது நோட்டுகள் எப்படி வந்தது என்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

ராம மோகன் ராவ் வங்கி அதிகாரிகள் மட்டும் அல்லாமல் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் அண்ணா நகரில் உள்ள ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை வருமானவரித்துறை அதிகாரிகள் 25 மணி நேரம் சோதனை நடத்தினர். அவரது மகன் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடைபெற்றது.

தலைமைச் செயலகம் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது. வருமான வரி சோதனையால் பதற்றம் உருவாகவே ராம மோகன் ராவின் வீடு, தலைமைச் செயலகம், வருமான வரித்துறை அலுவலகத்தில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது.

விடிய விடிய விசாணை கைப்பற்றப்பட்ட பணம், தங்கம், ஆவணங்களின் அடிப்படையில் ராவிடம் அதிகாரிகள் விடிய விடிய தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். தலைமைச் செயலகத்தில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அவரது அலுவலகத்தில் உள்ள அறையில் நடத்திய சோதனையில், 40க்கும் மேற்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பணம், நகை பறிமுதல் ராமமோகன் ராவின் வீடு, அலுவலகம், உறவினர் என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 48 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள், 7 கிலோ தங்கம் சிக்கியது. ராவ் வீட்டில் முதலில் 5 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின் கூடுதலாக 3 அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர். இவர்கள் 8 பேரும் ராவிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இன்று ராம மோகன் ராவும், அவரது மகனும் இன்று கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஏஎஸ் அதிகாரிகள் ராம் மோகன் ராவ் மகனுக்கும், சேகர் ரெட்டிக்கும் தொழில் அடிப்படையில் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராமமோகன ராவ் வீட்டில் நடந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் பங்கு இருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன.

விவேக்கிடம் தொடரும் விசாரணை ராம மோகன் ராவ் வீடு, மகன் விவேக் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நிறைவடைந்தது. சோதனையை முடித்துகொண்டு புறப்பட்ட அதிகாரிகள் ராம மோகன் ராவ் மகன் விவேக்கை, விசாரணைக்காக திருவான்மியூர் வீட்டிலிருந்து அழைத்து சென்றனர். நந்தனத்திலுள்ள விவேக்கின் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது. மற்ற 8 இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ராம மோகன் ராவ் மகன், உறவினர்கள் வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் பணம், 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவின் மகன் விவேக் வீடு, உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ்வின் மகன் மற்றும் உறவினர் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 30 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகையின் அளவு 5 கிலோ என தெரிய வந்துள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீடு , அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதலே அதிரடி ரெய்டு நடத்தினர்.

ராம மோகன் ராவுக்கு சொந்தமான ஆந்திராவில் உள்ள வீடு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இங்கு பல முக்கிய ஆவணங்களும் பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை திருவான்மியூரில் உள்ள ராம மோகன் ராவ்வின் மகன் விவேக் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான நகைகள் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்த நகைகளை மதிப்பீடு செய்ய நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

மேலும் விஜயவாடா, சித்தூரில் உள்ள ராம மோகன ராவ்வின் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ராம மோகன் ராவ் மகன் விவேக்கின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்பட 13 இடங்களில் நடந்த சோதனையில்  30 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் 5 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன.

 பாரதன் என்பதில் பெருமிதம் கொள்வோம் நமக்கு இல்லை ஈடு என்பதை உணர்ந்திடுவோம்

ஒரே காலகட்டத்தில்

உலகின் மற்ற பகுதியில

இந்தியாவில்

சென்செக்ஸ் 96 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்


  

 

 

 

For Advertisments Call 9361661660

The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution

A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com